166
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணையின் இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாயவிளக்கம் ( ரயலட் பார் ) முறைமையில் நடைபெறவுள்ளது.
நாளைய தினம் நடைபெறவுள்ள விசாரணையின் போது குறித்த வழக்கின் பிரதான விசாரணை அதிகாரியான குற்றப்புலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவின் மிகுதி சாட்சியம் பதிவு செய்யப்பட உள்ளது.
குறித்த அதிகாரியின் சாட்சி பதிவுகள் 24ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது. அதன் போது நேரம் போதாமையினால் மிகுதி சாட்சியம் இன்றைய தினம் 2ஆம் திகதி பதிவு செய்யப்படும் என தீர்ப்பாயம் அறிவித்தது.
இதேவேளை கடந்த 26ஆம் திகதி நடைபெற இருந்த சாட்சி பதிவுகள் தீர்ப்பாய நீதிபதிகளில் ஒருவரான மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரின் இறுதி கிரியைகள் நடைபெற இருந்தமையால் அன்றைய தினம் வழக்கு விசாரணைகள் நடைபெறவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love