குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளிலேயே அவர் இன்றைய தினம் முன்னிலையாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும், பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவித்து ரவி கருணாநாயக்க கடந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் பிரசன்னமாகத் தவறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி வரையில் பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் போது நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்க கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.