181
யா/புனித கென்றியரசர் கல்லூரியின் அதிபர் அருட்பணி யோ. அ. யேசுதாஸ் அடிகளார் ஓய்வுபெற்றதையடுத்து , கல்லூரியின் 22வது புதிய அதிபராக அருட்பணி இமானுவேல் கொட்விறீ யோயெல் OMI அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றுள்ளார். சம்பிரதாய பூர்வமான பதவியேற்பு நிகழ்வானது புனித அன்னம்மாள் ஆலயத் திருப்பலி பூசையுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டது .
இந்த நிகழ்வில் அமலமரித் தியாகிகள் சபையின் யாழ் முதல்வர் அருட்தந்தை எட்வின் வசந்தராஜா அவர்களும் , சண்டிலிப்பாய் கோட்ட கல்வி அதிகாரி திரு. S. சிவானந்தராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தனர் .
Spread the love