439
ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதி மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 29 பேர் உயிரிழந்ததுடன் 63 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான் – ஈரான் எல்லையருகே உள்ள ஹெராத் நகரத்தில் உள்ள ஷியா முஸ்லிம்கள் வழிபடும் மசூதிக்குள் நேற்று திடீரென நுழைந்த இனந்தெரியாத இரு நபர்கள் இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்து தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டதாகவும் மற்றையவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சராமரியாக சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love