குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்சில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை உதவியாளராக அமர்த்ததுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தினை மீறுவோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையுடன் நாற்பதாயிரத்து 428 பவுண்ட்கள் அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது காதலரையோ, அல்லது காதலியையோ உதவியாளராக வைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக நடைபெற்ற பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பிரான்கோயிஸ் பில்லான் என்பவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரச பணத்தினை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களை தனது பாராளுமன்ற உதவியாளர்களாக நியமித்து சம்பளம் வழங்கியதாக பில்லான் பதில் அளித்திருந்தார்.
இது போன்ற முறைகேடுகளை தவிர்க்கும் முகமாகவே பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இப்புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.