குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்ட மா அதிபர் திணைக்களம் தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சில ஊடக நிறுவனங்கள் விசாரணைகளுக்கு முன்னதாகவே தம்மை தூக்கில் இட முயற்சித்ததாகவும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் தாம் குற்றமற்றவர் என்பதனை நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சில அதிகாரிகள் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அதன் ஊடாக பிரபல்யம் அடைய முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியை நிலைநாட்டும் நோக்கிலேயே இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியது எனவும் நிதி அமைச்சில் எந்தவிதமான முறைகேடுகளும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ள ரவி கருணாநாயக்க தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை எனவும்; உண்மை அம்பலமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.