குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கில் பாரியளவில் வரட்சி நிலைமை ஏற்படும் என அண்மைய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக வெப்பமயமாதல் காரணமாக தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் கடுமையான வெப்பத்தை உணர நேரிடும் எனவும் குறிப்பாக இலங்கையின் வட பகுதி மக்கள் இவ்வாறு வெப்பத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2100ம் ஆண்டளவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் அதி கூடிய வெப்பநிலை காணப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் வெப்பநிலைமை, அனல் காற்று போன்ற சவால்களை எதிர்காலத்தில் எதிர்நோக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் வளியின் வெப்பநிலைமை பாரியளவில் உயர்வடையக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.