ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் மேஜர் உள்பட 2 ராணுவ வீரர்கள் பலி:-
ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய துப்பாக்கி சூட்டில் மேஜர் உள்பட 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குpராமம் ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலினை அடுத்து அந்த பகுதியில் தேடுதல் மேற்கொள்ளும் பொருட்டு அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
அப்போது அங்கிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கியதாகவும் ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு மேஜர் உள்பட இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் கோபால்புரா கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவலை அடுத்து கோபால்புரா கிராமத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்களை சரணடையுமாறு கூறினர். ஆனால், தீவிரவாதிகள் சரணடைய மறுத்த போது இருபதப்பினரும் பரஸ்பர தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரு ஏ.கே.47 துப்பாக்கிகளை படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.