152
இந்த ஆண்டில் கணனி குற்றச் செயல்கள் தொடர்பில் 1950 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கணனி அவசர பதிலளிக்கும் பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கணனி குற்றச் செயல்கள் தொடர்பிலான அதிகளவு முறைப்பாடுகள் முகநூல் குறித்தவை என தெரிவிக்கப்படுகிறது. போலி முகநூல் கணக்குகளை தயாரித்தல், அனுமதியின்றி முகநூல் கணக்குகளில் பிரவேசித்தல், முகநூலில் காணப்படும் படங்களை வேறும் கணக்குகளில் பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் அதிகளவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love