குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையை ஓர் பொருளாதார யுத்தமாகவே நோக்கப்பட வேண்டுமென ரஸ்ய பிரதமர் டிமிட்ரிடி மெடிடேவ் தெரிவித்துள்ளார்.
ரஸ்யா மீது முழு வீச்சில் பொருளாதார யுத்தம் செய்யும் நோக்கிலேயே அமெரிக்கா இவ்வாறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு செய்தமை மற்றும் உக்ரேய்ன் விவகாரத்தில் ரஸ்யாவின் செயற்பாடுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் சபை ஜனாதிபதி ட்ராம்ப்பையும் பதவி நீக்கக்கூடிய வகையில் செயற்பட்டு வருவதாக, காங்கிரஸ் சபையின் நடவடிக்கைகளை மெடிடேவ் விமர்சனம் செய்துள்ளார்.