சென்னை எழும்பூர் நீதிமன்றில் நடைபெற்று வந்த சசிகலா, டி.டி.வி. தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன
சென்னை எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றில் டி.டி.வி.தினகரன் மீதான இரண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பார்ப்பதற்கு டி.டி.வி.தினகரன் தரப்பு சட்டத்தரணிகள் அனுமதி கேட்டதனையடுத்து அதற்கு நீதிபதி அனுமதி வழஙகியுள்ளார். அதனையடுத்து வழக்குகள் தொடர்பான ஆவணங்களை டி.டி.வி.தினகரன் தரப்பு சட்டத்தரணிகள் பார்வையிட்டனர்.
பின்னர் இருவழக்குகளில் ஒரு வழக்கை 10ம்திகதிக்கும் இன்னொரு வழக்கை 21ம்திகதிக்கும் விசாரணைக்காக நீதிபதி ஒத்திவைத்துள்ளார். அதேவேளை சசிகலா மற்றும் அவரது சகோதரியின் அவரது ; மகன் பாஸ்கரன் ஆகியோர் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றில் ;; நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் சாட்சிகள் விசாரணைக்கு முன்னிலையாகததனால் விசாரணை 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.