153
கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகார சபையும், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து குருதி கொடை முகாம் ஒன்றை நடத்தியுள்ளனா்.
ஒருபுறம் வறட்சியால் தங்களின் சிறுபோக நெற் பயிர்ச்செய்கை, ஏனைய விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்து வரும் நிலையில் ஏனையவா்களின் உயிர் காக்கும் வகையில் இக் குருதி கொடை முகாம் இடம்பெற்றுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை இந்த குருதி கொடை முகாம் நடத்தப்படுகிறது.
இனி வருடந்தோறும் குருதி வழங்கும் வகையில் இக் குருதி கொடை முகாம் நடத்தப்படும் என ளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகார சபையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளா் ஆயகுலன் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த கமக்காரர்கள் என பலா் கலந்துகொண்டு குருதியை வழங்கியுள்ளனா்.
Spread the love