160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.
பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசத்தின் நலனை கருத்திற் கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாற்பது ஆண்டு கால பாராளுமன்ற வாழ்க்கையை முன்னிட்டு இன்று, பாராளுமன்றில் விசேட அமர்வுகள் நடத்தப்பட்டன. இந்த அமர்வுகளில் பங்கேற்ற போது இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
Spread the love