தொடர் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றமைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த பொருளாதார தடை மூலம் வடகொரியா தனது வருமானத்தில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.