162
குளோபல் தமிழ்ச் செய்திகள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை பதவி விலகுமாறு கோரவில்லை என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார் என வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தகவல்கள் பிழையானவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிணை முறி மோசடி தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரவி கருணாநாயக்க சாட்சியமளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு கோரியுள்ளார் என இலங்கையின் அநேக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love