157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சரியான தீர்மானத்தை எடுப்பார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் சரியான தீர்மானத்தை எடுப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தளம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், ரவி கருணாநாயக்கவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love