குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனியில் சைபர் குற்றச் செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அந்நாட்டு மத்திய குற்றவியல் காவல்துறையின் தலைவர் ஹோல்கர் முனெச் ( Holger Muench) தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் சைபர் குற்றச் செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
தொழில்வான்மையுடைய ஹெக்கர்களினால் பாரியளவில் சேதங்களை விளைவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய வகையில் இவர்களின் செயற்பாடுகள் அமைந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஹெக்கர் ஒருவருக்கு ஜெர்மன் நீதிமன்ற ஒத்தி வைக்கப்பட்ட தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹெக்கர்களை கட்டுப்படுத்த வேண்டுமாயின் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஹோல்கர் முனெச் தெரிவித்துள்ளார்.