குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பாவில் காலநிலை மாற்றங்களினால் பாரிய ஆபத்து ஏற்படக்கூடும் என புதிய ஆய்வுத் தகவல் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் காலநிலை அனர்த்தங்களினால் ஏற்படக் கூடிய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஐம்பது மடங்காக உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பம் காரணமாக மட்டும் 1 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
த லான்செட் பிளனெட்டரி ( The Lancet Planetary ) என்ற மருத்துவ சஞ்சிகையினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பச்சைவீட்டு விளைவு வாயு வெளியிடப்படுவதனை கட்டுப்படுத்தத் தவறினால் பாரிய அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் ஐரோப்பிய சமூகம் மீது மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.