குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்தள விமான நிலையம் இந்தியாவிற்கு வழங்குவதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறித்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
மத்தள விமான நிலையம் இந்திய நிறுவனமொன்றுக்கு குத்தகைக்காக வழங்கப்பட உள்ளது.
மத்தள விமான நிலையத்தை நாற்பது ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது குறித்து அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்தள விமான நிலையம் இந்தியாவிற்கு வழங்கப்பட உள்ளது
Aug 6, 2017 @ 03:41
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்தள விமான நிலையம் இந்தியாவிற்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய முதலீட்டாளர்களுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையத்தின் ஒரு மாத கால வருமானம் 40 லட்சம் ரூபா எனவும் அதற்கான செலவு 250 லட்சம் ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாளைக்கு மூன்று விமானங்கள் மட்டுமே மத்தள விமான நிலையத்திற்கு வருவதாகவும், மாதாந்தம் விமான நிலையத்தினை நிர்மானிப்பதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களுக்காக மாதாந்தம் 3000 லட்சம் ரூபா செலவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு 360 கோடி ரூபா என்ற அடிப்படையில் எட்டு ஆண்டுகளுக்கு கடன் செலுத்த வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தள விமான நிலையத்தை நிர்மானிப்பதற்காக ராஜபக்ஸ அரசாங்கம் 4000 கோடி ரூபாவினை செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை போன்றே மத்தள விமான நிலையத்தையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.