குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்மார்ட் கார்களுக்கான பாதுகாப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கார் உற்பத்தி நிறுவனங்கள் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இணைய வசதியுடைய கார்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுவதனை தடுக்க, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இணைய வசதியுடைய கார்களுக்குள் ஊடுருவி தனிப்பட்ட தகவல்களை களவாட சில தரப்பினர் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
புதிய கார்களை உற்பத்தி செய்யும் போதே சைபர் பாதுகாப்பை உச்ச அளவில் உறுதி செய்யும் வகையில் வடிவமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.