157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் நீர்க் கட்டணங்களில் விரைவில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விரைவில் நீர்க் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீர்க் கட்டணங்களில் மாற்றங்கள் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவையும் மேற்கொள்ளப்படும் என்ற போதிலும் அண்மைய ஆண்டுகளில் கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love