215
பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகளையும் யாழ் மாவட்டத்தில் அடிப்படைத் தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதற்காக இங்கிலாந்து தொடர்ந்து இலங்கை அரசாஙக்த்துடன் இணைந்து செயற்படும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒலிவர் கொல்வின் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலத்தின் பின்னர் தாம் எதிர்பார்த்திருந்த அபிவிருத்திகள், நல்லிணக்க புரிந்துணர்வுகள் என்பனவற்றை தற்போது காணமுடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவதானிக்கும் நோக்குடனேயே இலங்கை வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் அதன் ஒரு கட்டமாகவே தாம் யாழ்ப்பாணத்திற்கும் நிலைமைகளை கண்டறியும் நோக்கில் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love