குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கினால் மட்டும் போதாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்காவிட்டால் அரசாங்கம், ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு கோரியிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவியிலிருந்து நீக்கவிடாது, நிதிச் சலவைச் சட்டத்தின் கீழும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சூறாவளி அடித்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.