289
கிளிநொச்சி அக்கராயனில் இருந்து பூநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் முழங்காவில் வழியாக மன்னாருக்கும் கால்நடைகள் கடத்தப்படுவதாக அக்கராயன் கால்நடை வளர்ப்பாளர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
பூநகரிப் பொலிசார் யாழ்ப்பாணத்திற்குக் கால்நடைகளை களவாகக் கொண்டு செல்பவர்களுக்கு துணைபுரிவதாகத் தெரிவிக்கும் கால்நடை வளர்ப்பாளர்கள் அக்கராயனில் இருந்து மாட்டு வண்டில் சவாரிக்கென காளை கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் அக்கராயனுக்கு வண்டிகள் மட்டும்தான் வருகின்றன. கால்நடைகள் மன்னாரில் விற்கப்படுகின்றன.
ஏற்கனவே ஒரு பிரதேசத்தில் இருந்து கால்நடைகளைக் கொண்டு செல்வதானால் கால்நடை மருத்துவர், பிரதேச செயலாளர்களின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் அக்கராயனில் இருந்த நல்லிண மாடுகள் வண்டில் சவாரிகள், பொலிசாரின் ஒத்துழைப்புகள் என்பவற்றுடன் நாள்தோறும் மன்னாருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் களவாகக் கொண்டு செல்லப்படுவதாகவும் இறைச்சிக்காகவே இவை கொண்டு செல்லப்படுவதாகவும் நல்லிண மாடுகள் கடத்தப்படுவதன் காரணமாக அக்கராயனில் உள்ள கால்நடை வளம் எதிர்காலத்தில் அழிந்து விடும் என கால்நடை வளர்ப்பாளர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
அக்கராயன், ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் ஆகிய பகுதிகளில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் காணப்படுகின்றன. இதே வேளை துணுக்காய், மாந்தைகிழக்கு காடுகள் வழியாக தொடர்ச்சியாக மன்னாருக்கும் தென்னிலங்கைக்கும் கால்நடைகள் கடத்தப்படுகின்றன என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தொடர்ச்சியாக ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி வருகின்றார். என்பதும் குறிப்பிடத்தக்கது
Spread the love