165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இன்றைய தினம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகரவிற்கு பிணை வழங்கியுள்ளது.
லஹிரு வீரசேகர கடந்த ஜூலை மாதம் 23ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
சுகாதார அமைச்சு கட்டடத்திற்குள் அத்து மீறி பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என குற்றம் சுமத்தி காவல்துறையினர் லஹிருவை கைது செய்திருந்தனர்.
Spread the love