208
இலங்கைக் கடற்படையினர் 49 மீனவர்களை கைது செய்தமையினை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணல் மேல்குடி, மீமிசல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக படகுகள் அனைத்து மீன்பிடி துறை முகங்கள் மற்றும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும் நேரடியாகவும், மறைமுக மாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love