குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாகாணசபை தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அதன் ஊடாக மாகாணசபை தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான பதவிக் காலங்கள் பூர்த்தியாவதாகத் தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை மீறும் செயலாகும் என குறிப்பிட்டுள்ள அவர் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களையும் அரசாங்கம் ஒத்தி வைத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
20ம் திருத்தச் சட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் எதிர்ப்பை வெளியிட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.