வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எவ்வித அடிப்படையுமற்றது எனவும் அந்தக் குற்றச்சாட்டுக்கள் எவற்றுடனும் தனக்கு தொடர்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.
முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக தனது பதவியில் இருந்து விலகுகின்றேன் எனத் தெரிவித்த அவர் இந்த தீர்மானம் பெருமையுடன் எடுக்கப்பட்ட தீர்மானமே அன்றி வருத்தத்துடனோ அல்லது கஷ்டத்துடனே எடுத்த தீர்மானமல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.
மேலும் எந்தக் குற்றச்சாட்டுக்கள் வந்தாலும் தான் தொடர்ந்து போராடுவேன் எனவும் ரவி கருணாநாயக்க தனது விஷேட உரையில் கூறினார்.