குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில், சட்ட மா அதிபர் திணைக்களம் அசமந்த போக்கைப் பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
43 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நிதி மோசடி விசாரணைப் பிரிவு இந்த விசாரணைகளை பூர்த்தி செய்து இரண்டாண்டுகளுக்கு முன்னதாக சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு கோவைகளை அனுப்பி வைத்துள்ளது.
மஹிந்த தரப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் சட்ட மா அதிபர் திணைக்களம் மிகுந்த அசமந்தப் போக்கைப் பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.