181
நுவரெலியாவில் நேற்று மாலை கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குப்பை மேடு அமைந்திருக்கும் கந்தபளை இராகலை பிரதான வீதிக்கு அருகில் நேற்று மாலை இந்த கைகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதான வீதியில் சென்ற பாதசாரி ஒருவர் கந்தப்பளை காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு சென்ற கந்தபளை காவல்துறையினர் கைக்குண்டினை மீட்டுள்ளனர். இதனையடுத்து கந்தபளை பகுதிக்கு சென்ற குண்டு செயழிலக்கும் பிரிவு இக்கைகுண்டினை மீட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவத்தினரும் கந்தபளை காவல்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love