மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேலும் முப்பாதாயிரம் லிற்றர் குடிநீர் பூநகரி பிரதேசத்திற்கு தேவைப்படுகிறது என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
வரட்சியின் தாக்கத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டு இருக்கும் பாரிய பிரச்சனையாக காணப்படுவது குடிநீர்ப்பிரச்சனையாகும்.மாவட்டத்தின் பூநகரிப்பிரதேச செயாலாளர்பிரிவு இதில் அதிகளவில் பாதிப்பட்ட பிரதேச செயாலாளர் பிரிவு ஆகும்.
பூநகரிப்பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 15க்கும் அதிகமான கிராமாங்கள் முற்றாக நீர் இன்றி காணப்படும் பிரதேசமாக உள்ளது இவ்வாறான நீர்ப் பிரச்சனை தீர்ப்பதற்கு மாவட்ட அனர்த் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பூநகரிப்பிரதேச சபை ஆகியவற்றுடன் இணைந்து வரட்சியினால் பாதிக்கபட்ட 5604 குடும்பத்தில் 2160 குடும்பத்தினருக்கு மாத்திரம் தங்களால் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் 3144 குடும்பங்களுக்கான குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்யமுடியாமல் உள்ளதாக பிரதேச செயலாளர் பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் தெரிவித்தார்.