குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை குறித்து க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை நீடித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இரண்டு தடவைகள் இணை அனுசரணை வழங்கிய போதிலும் இலங்கை முழு அளவிலான கால மாறு நீதிப் பொறிமுறைமையை இதுவரையில் அமுல்படுத்தவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
சில முன்னேற்றங்கள் பதிவாகியுள்ளதனை மறுக்க முடியாது என தெரிவித்துள்ள க்ளோபல் தமிழ் போராம் காணாமல் போனோர் அலுவலகம் தெடர்பிலான சட்டம் நிறைவேற்றப்பட்டு பல காலங்கள் கடந்துள்ள போதிலும் அது இயங்க ஆரம்பிக்கவில்லை என தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை திருத்தி அமைக்கும் சட்டமும் நீண்ட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.