177
நேபாளத்தில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் வெள்ளம் அடித்துச் சென்றதனால் பல இடங்களில் மணசரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்ததாக நேபாள உள்துறை அமைச்சு இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Spread the love