கணிணியில் இணையம் மூலம் விளையாடப்படும் நீல திமிங்கலம் எனப்படும் புளூ வேல் என்ற விபரீத விளையாட்டினை இந்திய மத்திய அரசு உடனடியாக நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கூகுள், மைக்ரோசாஃப்ட், முகப்புத்தகம் ;, இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப், யாஹூ போன்ற தளங்களில் இருந்து புளூ வேல் சார்ந்த இணைப்புகளை உடனடியாக நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புளூ வேல் விளையாட்டை இணைத்தில் விளையாடி இந்தியாவில் பல குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் போக்கைத் தொடர்ந்து ஆபத்து நிறைந்த இந்த விளையதட்டினை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விளையாட்டின் காரணமாக ரஸ்யாவில் கடந்த 2015-ல் இருந்து 2016 வரை சுமார் 133 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது,
உலக முழுவதும் இந்த ‘நீல திமிங்கலம்’ என்ற விளையாட்டின் தாக்கத்தால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துள்ளதுடன் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இளையோரை தற்கொலைக்கு தூண்டும் நீல திமிங்கலம் எனும் இணைய விளையாட்டை தடை செய்யுமாறு கோரிக்கை
Aug 13, 2017 @ 03:04
கணிணியில் இணையம் மூலம் விளையாடப்படும் நீல திமிங்கலம் எனப்படும் புளூ வேல் என்ற விபரீத விளையாட்டினை இந்திய மத்திய அரசு உடனடியாக தடைசெய்ய வேண்டும் எனக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
இந்த விபரீத விளையாட்டு சிறுவர்கள், இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இந்த விளையாட்டு ‘வீடியோ கேம்’ அல்ல என்றும், இதில் கலந்துகொள்பவர்கள் எங்கிருந்தோ ஒருவர் பிறப்பிக்கும் கட்டளைகளை நிறைவேற்றுவதாகவும், இறுதியில் தற்கொலை செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படும் நிலை உள்ளதாகவும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
பொன்னான உயிர்களை காப்பாற்ற இந்த விளையாட்டுக்கு தடை விதிப்பது மிகவும் அவசியம் எனவும் கடிதத்தில் அவர் கூறி இருக்கிறார்.
இந்த விளையாட்டில் 50 நாட்களுக்கு வௌ;வேறு விபரீத விளையாட்டுகள் இந்த நீல திமிங்கலத்தில் இருக்கும். கடைசி கட்டமாக ஐம்பதாவது நாளில் பங்கேற்பாளர்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் பணி வழங்கப்படும்.
இந்த விளையாட்டின் காரணமாக ரஸ்யாவில் கடந்த 2015-ல் இருந்து 2016 வரை சுமார் 133 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது,
உலக முழுவதும் இந்த ‘நீல திமிங்கலம்’ என்ற விளையாட்டின் தாக்கத்தால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துள்ளதுடன் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மேற்கு வங்காளம் மாநிலத்தில் மித்னாபூர் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் அங்கன் தே என்ற மாணவன் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி நேற்றையதினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் மும்பையைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது