அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூவர் உயிரிழந்ததனை தொடர்ந்து அங்கு ;செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 1861-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது விர்ஜினியா மாநிலத்தில் அடிமைகள் சார்பு இயக்கத்தினை வழிநடத்திச் சென்ற ரொபேர்ட் இ லீ என்பவரது சிலை அகற்றப்பட உள்ளமையை கண்டித்து ஆயிரக்கணக்கான தீவிர வலதுசாரி வெள்ளை இனத்தவர்கள் நேற்று பேரணி நடத்தினர்.
இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினரும் பேரணி நடத்தியதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மோதல் கலவரமாக மாறிய சூழ்நிலையில், கூட்டத்தில் கார் ஒன்று வேகமாக மோதியதில், 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
நிலைமை மிக மோசமாக சென்றதால் அம்மாநில ஆளுனர் குறித்த பகுதியில் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டார். மேலும் பிரச்சனை தீவிரமாகாமல் தடுப்பதற்காக அந்நகர் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.