எதிர்வரும் 3 வருடங்களில் 2500 வீட்டுத்திட்டத்தினை அமைத்து தேர்தல் ஒன்றினை எதிர்கொள்வதே நல்லாட்சி அரசாங்கத்தின் இலக்கு என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் சீடா மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையும் இணைந்து தச்சுத் தொழில் பயிற்சியை நிறைவுசெய்த பயிற்சியாளர்களுக்கு தொழில் உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் யாழ்.திருமறைக்கலாமன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தச்சுத் தொழில் பயிற்சியினைப் பெற்ற உங்களுக்கு மாதாந்தம் 60 ஆயிரம் ரூபா வருமானத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன எனவும் வடமாகாண அரசியல் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வடமாகாணத்தில் 2551 வீடுகளும் 43 கிராமங்களும் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2018 மற்றும் 2019, 2020 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னர் வடமாகாண மக்களுக்கு மேலும் வீட்டுத்திட்டம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நாடுமுழுவதும் 439 திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்த அவர் இந்த வருடத்திற்குள் 500 வீட்டுத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தர்h.
எதிர்வரும் 3 வருடங்களில் 2500 வீட்டுத்திட்டத்தினை அமைத்து ஒரு தேர்தல் ஒன்றிற்கு முகம் கொடுக்கவேண்டுமென்பதே தமது நோக்காக இருக்கின்றது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.