குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து விலகிக்கொள்ளத் தீர்மானித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன முன்னணி கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 22 உறுப்பினர்கள் அடுத்த மாதம் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்வார்கள் எனவும் மஹிந்த ராஜபக்ஸவும் இந்த உறுப்பினர்களில் உள்ளடங்குவதாவும் கட்சியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டால், சுதந்திரக் கட்சி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், குறித்த உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்புரிமையை தக்க வைத்துக் கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பதில் சட்ட நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிடப்படுகிறது.