குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பு அறிவித்துள்ளது.
அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைத்து வருவதாகவும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக பெபரல் அறிவித்துள்ளது.
இதனைத் தெரிவித்துள்ள பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் உத்தேசம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு, பெபரல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் வழக்குத் தொடர்ந்து அதற்கு துரித கதியில் தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.