குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நேபாளத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு நேபாளத்தின் சுற்றுலாத் தளமொன்றில் வெள்ளம் காரணமாக சிக்கிய 500 மக்களை மீட்பதற்கு இவ்வாறு யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மழை வெள்ளம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளே பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக நாடு முழுவதிலும் சுமார் 49 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நேபாளாத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
கடுமையான பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் நகர்த்தப்பட்டுள்ளனர்.