ஜனாதிபதியாக பதவியேற்ற 3 வாரங்களில் ராம்நாத் கோவிந்த் 6 முக்கிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாக்கள் ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னர்தான் சட்டமாகும். அந்த வகையில் கடந்த ஜூலை 25ம்திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற ராம்நாத் கோவிந்த், கடற்படை சட்ட மசோதாவுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்.
மேலும், குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை திருத்த மசோதா, காஷ்மீரில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பதற்கான புள்ளியியல் சேகரிப்பு திருத்த மசோதா, தகவல் தொழில்நுட்ப சட்டம், அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி சட்டம், காலணி வடிமைப்பு மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.