குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் நிதியமைச்சர் பிலிப் ஹமென்டை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவேண்டும் என்பதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் முக்கிய குழுவொன்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை தடுப்பதற்கான சதி முயற்சியி;ல் நிதியமைச்சர் ஈடுபட்டுள்ளதாக லீவ் ஈயு என்ற அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது
பிரித்தானியா வெளியேறுவதை தாமதப்படுத்தினால் 52 வீதமான மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயற்படலாம் என நினைக்கும் பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்களில் நிதியமைச்சர் பிலிப் ஹமொன்ட் முக்கியமானவர் என லீல் ஈயு அமைப்பின் தலைவர் ஆரோன் பானங்ஸ் , ஹமொன்டின் தொகுதி வாக்காளர்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நிதியமைச்சரை வேட்பாளராக தெரிவு செய்யவேண்டாம் என கொன்சவேர்ட்டிவ் கட்சியை கேட்டுக்கொள்ளுமாறு லீவ் ஈயு அமைப்பின் தலைவர் தனது கடிதத்தில் வாக்காளர்களை கோரியுள்ளார்.
அமைச்சர் அலுவலகம் இது குறித்து இதுவரை கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.