226
இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.
செங்கோட்டையில் நடைபெறும் கொடியேற்றும் நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், தேவகௌடா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று காலை செங்கொட்டைக்கு சென்ற பிரதமர் மோடி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதன் பின்னர் சரியாக 7.30 மணியளவில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.
சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Spread the love