தமிழகம் முழுவதும் விவசாயிகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய அரசிடமிருந்து தமிழக விவசாயிகளுக்கான உரிமைகள், நிதியை பெறுவதற்கும், விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை வழங்க அழுத்தம் கொடுப்பதற்காகவும் இந்த போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நாளை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டம் அமைதியாக அறவழியில் நடைபெறும் எனவும் கோரிக்கை முழக்கங்களை தவிர்த்து, வேறு எந்தவிதமான அநாகரீகமான அசம்பாவிதமான செயல்களுக்கும் இடம் தராத வகையில் போராட்டம் நடைபெற்று, தமிழக மக்களின் ஆதரவை விவசாய சமுதாயத்திற்கு பெற்றிடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.