167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதிமன்ற விவகாரங்களில் எவரும் தலையீடு செய்யக் கூடாது என பொதுபல சேனா இயக்கம் கோரியுள்ளது. நீதிமன்றங்களும் சட்ட மா அதிபர் திணைக்களமும் சுயாதீனமாக இயங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
மேலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது எனவும் பக்கச்சார்பற்ற நிலையில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் சட்டத்தை மதிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுபல சேனா கோரியுள்ளது.
Spread the love