குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக கொழும்பு தகவலொன்று தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதனுடன் தொடர்பு பேணும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் கையொப்பமிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக குறித்த அமைச்சர் தெரிவித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதவி விலக வேண்டும் அல்லது ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமென மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளதாக குறித்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.