குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசியல் சாசனம் அமைப்பது தொடர்பில் முதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
உத்தேச அரசியல் சாசனம் அமைக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நபரைச் சுற்றி காணப்படும் அதிகாரங்களை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய தேர்தல்களுக்கு முன்னதாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
1 comment
உத்தேச அரசியல் சாசனம் அமைக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக அமைந்துள்ளதெனக் கூறும் திரு. ராஜித சேனாரத்னவிடம் ஒரு கேள்வி, ‘கைப்புண்ணைப் பார்க்கக் கண்ணாடியொன்று தேவையா’, வைத்தியரே? திரு. மகிந்த ராஜபக்ஷ இல்லையென்று சொல்வதொன்றை நீங்கள், ‘மக்கள் தீர்ப்பு’, என்றதொரு முக்காட்டில் மறைந்திருந்து சொல்லப் போகின்றீர்கள்! இதற்கு, ‘முன்னாளே மேல்’, என்று நாம் நினைப்பதில் தவறில்லையே?