காணி விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஐ.நா. செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் வெளிநாட்டு தூதரங்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் தமிழ் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் குடியிருப்பது நல்லிணக்கத்திற்கு சாதகமான சமிக்ஞை அல்ல எனத் தெரிவித்துள்ள அவர் தமிழ் மக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள் எனவும் காணி விடயம் தொடர்பில் சர்வதேச சமூகம் தலையீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் கோப்பாப்பிலவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலையில் அம்மக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில அவர் ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தார் அவருடைய கோரிக்கைகளுக்கு அவர்களிடம் இருந்து பதில் கிடைக்காத நிலையில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டை நாடியுள்ளார்
1 comment
காணி விடுவிப்பு விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் எனக் கோரித் திரு. சம்பந்தன் ஐ.நா. செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் வெளிநாட்டு தூதரங்களுக்கு அவசர கடிதம் அனுப்பியதானசெயற்பாட்டை, ‘பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்’, என்று சொல்வார்களோ?
அல்லது, ‘பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டுவது’, என்றும் சொல்லலாமோ?