குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சன் பத்திரிகையில் வெளியான கட்டுரையொன்று தொடர்பில் பிரித்தானியாவின் யூத மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளன.
சன்னில் வெளியான முஸ்லீம் பிரச்சினைகள் என்ற கட்டுரை ஹிட்லர் காலத்தின் யூதர்கள் பிரச்சினை என்ற வாதத்தை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக யூத மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன
டிரெவர் கவனக் என்பவர் எழுதியுள்ள கட்டுரை காரணமாகவே இந்த சர்ச்சை உருவாகியுள்ளது. குறிப்பிட்ட கட்டுரையில் இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தும் பல விடயங்கள் காணப்படுவதுடன் பிரித்தானியா முஸ்லீம் பிரச்சினையின் பிடியில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்லாம் இதுவரை அதிகம் ஆராயப்படாத அச்சறுத்தல்களை , அச்சங்களை கொணடுள்ளது என தெரிவித்துள்ள அக்கட்டுரை ஆசிரியர் இது முன்னாள் பிரதமர் டொனி பிளயரின் காலத்திலேயே ஆரம்பமானது எனவும் அக்காலத்தில் இடம்பெற்ற பாரிய குடியேற்றவாசிகளின் வருகையே இதற்கு காரணமாகயிருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கட்டுரைக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ள இதேவேளை பல யூத மற்றும் இஸ்லாமிய சமூக அமைப்புகள் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளன.
இதேவேளை த சன் பத்திரிகை இஸ்லாமியர்கள் குறித்த அச்சத்தை தூண்ட முயற்சிப்பதாக பிரித்தானியாவின் தொழிற்கட்சியின் தலைவர் உட்பட 100 ற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்