குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இரண்டு பிரதான தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தல்கள் அனைத்தையும் ஒரே நாளில் நடத்தப்படும் என அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இடைக்கிடை மாகாணசபை தேர்தலை நடத்துவதனால் காலமும் நேரமும் விரயமாகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இணங்கியுள்ளதாகவும், மஹிந்தவின் கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள டொக்டர் ராஜித சேனாரட்ன சில மாகாணசபைகளுக்கான தேர்தலை சில காலங்களுக்கு ஒத்தி வைப்பதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என தெரிவித்துள்ளார்.