164
பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் வெளியான வீடியோ காட்சி தொடர்பில் பல பொய்ப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குனசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குனசேகர இதனை கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அந்த சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும், அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் சிவில் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
Spread the love